குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்

Written by vinni   // April 11, 2015   //

children-play-at-valvettithuraiநகரத்து சிறார்கள் மூளையை வளர்த்து எடுக்கும் நல்ல பல மரபு ரீதியான குழந்தை விளையாட்டுக்களை மறந்து அபாக்கஸ், கணணி என சென்று, சிறு வயதிலேயே கண்ணுக்கும் கண்ணாடியை நாட, கிராமத்துச் சிறார்களையும் மெல்ல சாம்சங் மற்றும் ஸ்டார் டிவி தொற்றிக்கொள்ள, இந்தச்சிறுமிகளின் கையில் இன்றும் சிக்கியுள்ளன செலவற்ற சிப்பிகளும் சோகிகளும்.

இலங்கையின் வடக்கு யாழ்பாண தீபகற்பத்தில், அதிலும் குறிப்பாக வடமராட்சியில் “கணித மூளை” சற்றே அதிகம் என்பார்கள். அதற்கு இவையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
children-play-at-valvettithurai
இப்படம் யாழ் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை என்ற ஊரில் தம்மை மறந்து மிகுந்த ஈடுபாட்டுடன் வீதியோர குந்து ஒன்றில் இருந்து சிப்பி, சோகிகளுடன் உள்ள இரண்டு சிறுமியர்.

நகரத்து பெற்றோர் அந்த வகுப்பு, இந்த வகுப்பு என புலமை பரிசில் போன்ற பரீட்சைகளுக்காகத் பிள்ளைகளுடன் சேர்ந்து தாமும் திரிந்து கோட்டை மட்டுமட்டாகத்தொட,  போரிலேயே கடந்த மூன்று சகாப்தங்களை தொலைத்த ஒரு இனத்தின் பிள்ளைகள் இவர்கள், எதுவித ஆர்ப்பாட்டமும் இன்றி கோட்டைதாண்டுவதற்கு இவை நிச்சயம் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

Photo Courtesy: valvettithurai.org


Similar posts

Comments are closed.