அவுஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி: மார்த்தட்டிக் கொள்ளும் கோஹ்லி

Written by Sugumar   // January 12, 2015   //

kohli_century_001அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்ததாக கோஹ்லி பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

கடந்த முறை மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த முறை அவுஸ்திரேலியாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தது. இதனால் மோசமான தோல்விகள் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே, இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் ஒரு சில பகுதியின் போது செய்த தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும் அவுஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க தவறவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக விளையாடியபோதிலும், இந்திய அணி நிலை தடுமாறவில்லை.

4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அவுஸ்திரேலியா பலமாக எதிர்த்தது. எனவே ஆட்டம் டிராவில் முடிந்தது என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.