தீவிரவாதத்தை எதிர்ப்போம்: 40 நாட்டு தலைவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி

Written by Sugumar   // January 12, 2015   //

france_rally_005பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தியுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திற்குள் கடந்த 7ம் திகதி புகுந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நேற்று பாரிசில் ஒற்றுமை பேரணியில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பேரணியில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ் ஹோலண்டே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்பாகு, பாலஸ்தீன ஜனாதிபதி மக்முத் அப்பாஸ், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் பிரான்சை சேர்ந்த 15 லட்சம் பொதுமக்கள் ஒன்று கூடி தெருக்களில் பேரணியாக வந்துள்ளனர். இந்த பேரணியின் முன்புறம் வெளிநாட்டு தலைவர்கள் அணிவகுத்துள்ளனர்.

மேலும் பிரான்சின் மற்ற நகரங்களிலும் தீவிரவாதத்துக்கு எதிராக கண்டன பேரணி நடந்தது என்றும் நாடு முழுவதும் மொத்தம் 33 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பேரணி சென்ற முக்கிய பகுதிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.


Similar posts

Comments are closed.