பர்மிங்காம் முழுமையான முஸ்லிம் நகரம்! புது கருத்தால் சர்ச்சை

Written by Sugumar   // January 12, 2015   //

stephen_002இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரை முழுமையான முஸ்லிம் நகரம் என அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்டீவன் எமர்ஸன் என்ற அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் தீவிரவாதம் தொடர்பாக நூல்களை எழுதியுள்ளார்.

இவர் சமீபத்தில், லண்டன் நகரின் சில பகுதிகளில் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியாதவர்களை முஸ்லிம் மதப் பொலிஸார் தாக்குவதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் பர்மிங்காம் நகரை முழுமையான முஸ்லிம் நகரம் என்றும் அங்கு முஸ்லிம் அல்லாதவர்கள் அங்கு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து, தான் மோசமான தவற்றை இழைத்துள்ளதாக ஸ்டீவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.


Similar posts

Comments are closed.