அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!- ஜனாதிபதி

Written by Sugumar   // January 12, 2015   //

maithripala_sirisenaஎவராவது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களாக இருந்தால் அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி மை்த்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

எந்தவொரு அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவராவது ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து, முரணாக செயற்பட்டால் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிகாரமும் ஆட்சியும் நிலையானதல்ல. உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயற்படுவது சிறந்த பழக்கமல்ல.

நாம் தேர்தலில் அளித்த வாக்குறுதியைப் போன்று அமைச்சரவையை 30ற்குள் குறைத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.