வாய் வார்த்தைகளால் விளாசும் கோஹ்லி! யுக்தியை தீட்டும் அவுஸ்திரேலியா

Written by Sugumar   // January 10, 2015   //

viratkohli_fight_002இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி, வாய் வார்த்தைகளால் அவுஸ்திரேலிய வீரர்களை விரட்டி வருகிறார்.

இந்திய அணி டெஸ்ட் தொடரை பறி கொடுத்தபோதிலும், தனது அபார ஆட்டத்தால் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அச்சம்கொள்ள வைத்தார் கோஹ்லி.

கோஹ்லியின் அதிரடி பற்றி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேஸவுட் கூறுகையில், அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி சிறப்பாக விளையாடினார்.

அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தொடர் தாக்குதலைத் தொடுத்து அவரது விக்கெட்டை சீக்கிரம் கைப்பற்றி விட்டோம் என்றால், மற்ற விக்கெட்டுகள் விரைவில் விழுந்து விடும்.

விராட் கோஹ்லியை சாய்க்க நாங்கள் ஏதாவது ஒரு புது யுக்தியை வகுப்போம். அவர் வேகமாக, சுதந்திரமாக ஓட்டங்கள் குவிக்க விரும்புவார். எனவே அவருக்கு தொடர்ந்து மிகச் சிறப்பாகப் பந்து வீசி ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாற வைக்க வேண்டும்.

அவரை நீண்ட நேரம் ஓட்டங்கள் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்திவிட்டால், அதன் பிறகு நெருக்கடியில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்து விடுவார் என்று நம்புகிறோம்.

பொதுவான இந்திய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் உணர்ச்சி வேகத்தைக் காட்டாதவர்கள். எதிராளி எவ்வளவு சீண்டினாலும் புத்தரைப் போல அமைதி காத்து நிற்பார்கள்.

முன்னாள் ஜாம்பவான்களான டெண்டுல்கர், டிராவிட் போன்றோர் எதிராளிக்கு பேட் மூலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நிற்கிறார், விராட் கோஹ்லி. இந்தியாவின் வேகமான இளந்தலைமுறையை இவர் பிரதிபலிக்கிறார் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.