அல்லாவின் சாபத்தை அனுபவிப்பீங்க! டாட்டூக்களை அழிக்க மிரட்டும் இஸ்லாமிய அமைப்பு

Written by Sugumar   // January 10, 2015   //

tattoo_banned_002உடலில் பொறித்துள்ள டாட்டூக்களை துருக்கிய இஸ்லாமியர்கள் அகற்ற வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆசிய நாடான துருக்கியில் ஆண்களும், பெண்களும் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள்.

இந்நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் டாட்டூ எனப்படும் பச்சைகுத்திக் கொள்ளும் மோகம் அதிகம்.

ஆனால் இந்த டாட்டூவிற்கு இஸ்லாமிய அமைப்பு தியானெட் பத்வா தற்போது பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த பத்வா அமைப்பு கூறியதாவது, டாட்டூ பொறித்துக்கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை.

டாட்டூவை அகற்ற முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள் அல்லது அதை பொறித்துக் கொண்ட ஆணோ, பெண்ணோ கடவுளின் முன்னாள் மன்றாடி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஏனெனில் உடலில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான அழகு கலைகளையும் இறைதூதர் முகமது தடை செய்துள்ளார்.

மேலும் இறைவன் படைத்த உடல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவோர், அல்லாவின் சாபத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நமது இறை தூதர் கூறியுள்ளார்.

எனவே லேசர் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை செய்தோ உடலிலுள்ள டாட்டூவை அகற்றுவதே நல்லது என்றும் முகத்தில் இருந்து முடியை அகற்றுவதோ, கண்புருவத்தை திருத்துவதோ கூடாது மற்றும் வெள்ளை முடியை கறுப்பாக்க மை பூசக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.