பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்திய கனடா!

Written by Sugumar   // January 10, 2015   //

france_flag_001கனடாவின் ரொறொன்ரோ நகரசபையில் பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்த வெள்ளிக் கிழமையன்று பிரான்ஸ் நாட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பாரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12 பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார்.

பிரதம மந்திரி Stephen Harper, சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார்.

பாரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சில கனடிய பிரசுரங்கள் பாரிஸ்-சார்ந்த பத்திரிகையுடனான தங்கள் ஒருமைப்பாட்டை காட்டும் முகமாக கார்ட்டூன்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.