ஹாலிவுட் படத்தை பார்த்த போப் ஆண்டவர்!

Written by Sugumar   // January 9, 2015   //

jolie_pope_002உலக கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர், பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இயக்கிய ஹாலிவுட் படத்தை பார்த்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் இயக்கத்தில் உருவான UnBroken படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நேற்று வாடிகன் வந்த ஏஞ்சலினா ஜோலி, படத்தை போப் ஆண்டவருக்கு திரையிட்டு காண்பித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய துருப்புகளிடம் மாட்டிக் கொண்ட லூயிஸ் ஜாம்பர்ன்னி(Louis Zamperini) என்ற அமெரிக்க வீரரை பற்றிய திரைப்படம் இதுவாகும், இவர் ஒரு கிறிஸ்துவ மத போதகராகவும், பேச்சாளராகவும் இருந்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே போப் ஆண்டவர் இந்த படத்தை பார்த்தாக கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.