கணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Written by Sugumar   // November 28, 2014   //

whatappஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அதே சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்கலாம். கணனியில் வாட்ஸ்- அப் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

1. கணனியில் வாட்ஸ்- அப் பயன்படுத்த முதலில் (bluestacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

2. பதிவிறக்கம் செய்த ப்ளூஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

3. ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.

4. ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்-அப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.

5. வாட்ஸ் அப் அப்ளிகேஷன் பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள்.

6. அடுத்து உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ்-அப்பில் என்டர் செய்யுங்கள்.

7. உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்த ரெடியாகி விடும்.


Similar posts

Comments are closed.