அப்பிளின் அதிரடி மாற்றம்!

Written by Sugumar   // November 27, 2014   //

Appleஅப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இதன்படி 2015ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடைகின்றது.

எனவே 2015ம் ஆண்டிலிருந்து Yahoo அல்லது Bing இனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் இயல்புநிலை தேடுபொறியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்துடன் சிறந்த உறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.